Saturday, December 22, 2007

அபிராமி அந்தாதி 1


அபிராமி அந்தாதி

வினாயகர் துதி

திருவாக்கும் செய்கருமம் கைகூடும்

செஞ்சொல் பெருவாகும் பீடும்,

பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானுரும்,

ஆனை முகத்தானை காதலால் கைகூப்புவர்தம் கை….

காப்பு

தாரமர் கொன்றயும் சண்பக மாலையும் சாத்தும் ,தில்லை

ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே ! உலகு ஏழும் பெற்ற

சீர் அபிராமி அந்தாதி எப்பொதும் என் சிந்தை உள்ளே

காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே….

1.அறிவும் கலையும் பெற

உதிக்கின்ற செங்கதிர் ! உச்சித்திலகம் ! உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம் ! மாதுளம் போது ! மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி! மென்கடிக்குன்கும தோயம் என்ன

விதிக்கின்ற மேனி ! அபிராமி என் தன் விழுத்துணையே

2.தெய்வத்துணை கிடைக்க

துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்

பணையும் கொழுந்தும் பதிகொண்டவேறும் பனிமழர்பூன் கணையும் கருப்புச் சிலையுமென் பாசன்குசமும் கையில்

அணையும் திரிபுரசுந்தரி யாவது அறிந்தனமே..

3.பாவம் அகல

அறிந்தேன் எவரும் அறியா மறையை ;அறிந்து கொண்டு

செறிந்தென் உனது திருவடிக்கே திருவே ! வெருவிப்

பிரிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்

மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே…

4.உயர் நிலை அடைய

மனிதரும் தேவரும் மாய முனிவரும் வந்து ;சென்னி

குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்

பனிதரும் தின்களும் பாம்பும் பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என்புந்தி என்னாளும் பொருந்துகவே..

5.மனக்கவலை தீர

பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையாள்

வருந்திய வைன்சி மருங்குல் மனான்மணி ,வார்சடையோன்

அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை .அம்புயமெல்

திருந்திய சுந்தரி , அந்தரி பாதம் என் சென்னியதே..

அபிராமி அந்தாதி , அபிராமி பட்டர் அவர்களால் இயட்றபட்டது, இது 100 வெண்பாக்களை கொண்டது , இந்த பதிவு ஆன்மிக பதிவாக , கூறினாலும் இது அடிப்படையில் பெண்களின் சிறப்பை கூறும், பதிவாகவும் கொள்ளலாம்…,எப்படியோ என்னால் இயன்ற சிறு பணி , தமிழுக்கும் , ஆன்மிகத்திட்கும்…… இதன் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் நான் முதன் முதலில் இ –கலப்பை கொண்டு எழுதிய முதல் இடுகை, சத்தியமாக இதற்கு முந்தய இடுகை , பதிவு எல்லாம் இதன் மூலமே எழுதினேன், விரைவில் என்னால் இயன்ற அளவில் இதை மின் புத்தகமாகவும் (பி டி எப்) வெளியிட முயல்கின்றேன்…..


இதன் ஆங்கில இடுகை இங்கு காணலாம்..

பிழை இருந்தால் மன்னித்து , தங்களது கருத்துகளையும் கூறுங்கள்..

அன்புடன்

கஇரா .செந்தில் நாதன்