Saturday, December 22, 2007

அபிராமி அந்தாதி 1


அபிராமி அந்தாதி

வினாயகர் துதி

திருவாக்கும் செய்கருமம் கைகூடும்

செஞ்சொல் பெருவாகும் பீடும்,

பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானுரும்,

ஆனை முகத்தானை காதலால் கைகூப்புவர்தம் கை….

காப்பு

தாரமர் கொன்றயும் சண்பக மாலையும் சாத்தும் ,தில்லை

ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே ! உலகு ஏழும் பெற்ற

சீர் அபிராமி அந்தாதி எப்பொதும் என் சிந்தை உள்ளே

காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே….

1.அறிவும் கலையும் பெற

உதிக்கின்ற செங்கதிர் ! உச்சித்திலகம் ! உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம் ! மாதுளம் போது ! மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி! மென்கடிக்குன்கும தோயம் என்ன

விதிக்கின்ற மேனி ! அபிராமி என் தன் விழுத்துணையே

2.தெய்வத்துணை கிடைக்க

துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்

பணையும் கொழுந்தும் பதிகொண்டவேறும் பனிமழர்பூன் கணையும் கருப்புச் சிலையுமென் பாசன்குசமும் கையில்

அணையும் திரிபுரசுந்தரி யாவது அறிந்தனமே..

3.பாவம் அகல

அறிந்தேன் எவரும் அறியா மறையை ;அறிந்து கொண்டு

செறிந்தென் உனது திருவடிக்கே திருவே ! வெருவிப்

பிரிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்

மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே…

4.உயர் நிலை அடைய

மனிதரும் தேவரும் மாய முனிவரும் வந்து ;சென்னி

குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்

பனிதரும் தின்களும் பாம்பும் பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என்புந்தி என்னாளும் பொருந்துகவே..

5.மனக்கவலை தீர

பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையாள்

வருந்திய வைன்சி மருங்குல் மனான்மணி ,வார்சடையோன்

அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை .அம்புயமெல்

திருந்திய சுந்தரி , அந்தரி பாதம் என் சென்னியதே..

அபிராமி அந்தாதி , அபிராமி பட்டர் அவர்களால் இயட்றபட்டது, இது 100 வெண்பாக்களை கொண்டது , இந்த பதிவு ஆன்மிக பதிவாக , கூறினாலும் இது அடிப்படையில் பெண்களின் சிறப்பை கூறும், பதிவாகவும் கொள்ளலாம்…,எப்படியோ என்னால் இயன்ற சிறு பணி , தமிழுக்கும் , ஆன்மிகத்திட்கும்…… இதன் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் நான் முதன் முதலில் இ –கலப்பை கொண்டு எழுதிய முதல் இடுகை, சத்தியமாக இதற்கு முந்தய இடுகை , பதிவு எல்லாம் இதன் மூலமே எழுதினேன், விரைவில் என்னால் இயன்ற அளவில் இதை மின் புத்தகமாகவும் (பி டி எப்) வெளியிட முயல்கின்றேன்…..


இதன் ஆங்கில இடுகை இங்கு காணலாம்..

பிழை இருந்தால் மன்னித்து , தங்களது கருத்துகளையும் கூறுங்கள்..

அன்புடன்

கஇரா .செந்தில் நாதன்




Monday, July 2, 2007

என் (ண் ) என்று சொல்லுவேன் ... என் அன்னையே..... நின்னைப்பற்றி ....!






என் ( ண்
) அன்னையே நின்னைப்பற்றி..!


ஓர்
உடலாய் இருந்த நம்மை...!
இரு உடல் ,உயிர் ,ஆக்கியவளே ..,,!
மூன்று உலகிலும் உன் போல் இல்லை ஒரு பந்தம்.. தாயே.. ..!
நாலும் உணர்த்தினாய் நீ எனக்கு ...!
ஐந்து அறிவித்தவளே நீதான் ....!
ஆறாம் அறிவு , ஆனாய் நீ எனக்கு...!
ஏழு பிறவி எடுத்தாலும் உனக்கு முன் ஒப்பில்லை எவரும் ....!
எட்டு திசைகளிலும்...என்னை காப்பவளே...
ஒன்பது முறை நான் பிறந்தாலும் உன் மகனாக பிறக்கின்ற வரம் வேண்டும் தாயே ...!


அன்புடன்
க இரா .செந்தில் நாதன்


காதல் செய்வீர்,காதல் செய்வீர்,


காதல் ...இந்த மூன்றெழுத்து மந்திரசொல் ..... உலகில் எத்துணையோ சரித்திரங்களை ... .உருவாக்கியும் , அழித்தும் , உள்ளது , எப்படி ...

காதல் ...மனிதனுக்கு மட்டுமே வரும் ...ஒரு உன்னதமான உணர்வு...ஏன் என்றால் , எந்த விலங்குகளும் , தன் இணை மீது அதுவும் கூடும் காலங்களில் மட்டுமே ... காமத்தால் காதல் கொண்டிருக்கும்...

ஆனால் மனிதன் மட்டுமே ..

தன் இணை மீது , கல்யாணத்திற்கு முன்னும் ,கல்யாணத்திற்கு பின்பும் ,பிறப்பிலும், இறப்பிலும், அவன் ,அவள் சுக ,துக்கங்களிலும்,காதல் கொண்டிருக்கின்றான்...

ஆனால் காதல் ஆணுக்கு , பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீது வருவது இன்றி, மனிதன் தம் தாய்நாடு,மொழி, இனம், வாழ்க்கை, லட்சியங்கள் ,ஆகியவற்றின் மேலும் காதல் கொண்டிருந்தான் அதனாலேதான் வெற்றியும் ,பெறுகின்றான்...
காந்திஜி தீண்டாமை ஒழிப்பு மீதும் ..., நேதாஜி தாய் நாட்டின் மீதும், பாரதி தமிழ் மீதும்...,அம்பானி தொழில் மீதும் , கொண்ட காதலினால்தான் வெற்றியும் பெற்றார்கள்... ஹிட்லர் , மாவீரன் என்று போற்றப்படும் அலெக்சாந்தர் ,முசொலின் , மேலும் பலர்

ஆகையால் மனிதனின் காதல் மண் , பெண் , பொன் , பொருள் , இவைகளை தாண்டி வாழ்வின் ,லட்சியங்களைும் ,சிந்தனைகள் மீதும் உருவாகும் போது ....அவன் வெற்றி பெற்று வரலாற்றில் ஜொலிகின்றான் ......

காதல் செய்வீர்,காதல் செய்வீர், இவ்வையகம் இன்புற ......

முதலில்...
வாழ்க்கையை காதல் செய்வீர் ,,,! வாழ்க்கையை காதல் செய்வீர் ,,,!
க இரா .செந்தில் நாதன்

Saturday, June 30, 2007

அம்மா எனும் உயிரெழுத்து...

ன்பை அணுவாக்கி என்னை உயிராகியவளே....!
சை உடன் என்னை தூக்கி ஆளாக்கியவளே....!
வுலகில் இல்லை இதற்கு மீறிய பந்தம்.....!
ருயிராய் உன்னுள் வளர்த்து உலகத்தில் ஓர் உயிராய் ஆக்கியவளே....!
ன் நினைவால் என் நினைவுடிினாய்....!
ண், உறக்கம் இன்றி என் உயிர், உடல் , வளர்த்தவளே....!
த்துணை துன்பம் நான் தந்த போதிலும்...!
ன் எனை உன் உயிர் கொடுத்து உருவாக்கினாய்...!
யம் இல்லை தாயே நின் அன்பால் வெல்ளுவேன் இவ்வுலகை....!
ரு கோடி ஜென்மங்கள் நான் பிறந்தாலும் இறக்காது நம் பந்தம்.....!
ராயிரம் யுகங்கள் கழிந்தாலும், நீதானே என் உயிர் மூச்சு.....!
:. றிணை ஆவேன் நானும் உன் நினைவைய் இழந்தால்........!

அம்மா....!

அன்புடன்
இரா . செந்தில் நாதன்

Friday, June 29, 2007

என் பேனா...?


என் பேனா...?

உன் விழி திரையில் நான் காட்சி அமைப்பேனா ...?
உன் செவ்விதழில் என் இதழ் வைப்பேனா ...?
உன் கார் கருங்கூந்தலில் என் கரம் கொண்டு மலர்பேனா ...?
உன் சிருங்கார காதுகளில் மோதிடும் தென்றிலாய் பிறப்பேனா ..?
நீ எனை நினைத்திருந்தால் நான் என்றும் இறப்பேனா..?
நான் என்றும் உனை நினைப்பேனா...?
அல்லது இன்றே...இறப்பேனா...?
உன் நினைவாலெதான் இக் கதை எழுத்துகின்றது, என் பேனா ..?
இதை நானும் சொல்ல மறைப்பேனா.....?

அன்புடன்
கரா . செந்தில் நாதன்

என் முதலெழுத்து..........


என் முதலெழுத்து..........
உயிர்...மூன்றெழுத்து...!
உயிர் தந்த ,அன்னை ...மூன்றெழுத்து...!
அன்னை காட்டிய அன்பு ..மூன்றெழுத்து...! அன்பினால் உருவாகும் ..கனிவு ,மூன்றெழுத்து...! கனிவினால் ,உருவான பணிவு..மூன்றெழுத்து...! பணிவு ஆல் உண்டான ..தகுதி ..மூன்றெழுத்து...! தகுதியால் வந்த திறமை மூன்றெழுத்து...!
திறமையினால் நான் அடைந்த பதவி..மூன்றெழுத்து...!
பதவியினால் நான் செய்யும் கடமை ..மூன்றெழுத்து...!
கடமையினால் எனை அடையும் வெற்றி...மூன்றெழுத்து...!
வெற்றியினால் கிட்டும் புகழ் ..மூன்றெழுத்து...!

இந்த மூன்றெழுத்தில் எல்லாம் நான் என்ற ஈரெழுத்து இருக்க காரணம் ஆன என் அன்னை நீயே என்றும் என் (உயிர்) முதலெழுத்து...!