Friday, June 29, 2007

என் முதலெழுத்து..........


என் முதலெழுத்து..........
உயிர்...மூன்றெழுத்து...!
உயிர் தந்த ,அன்னை ...மூன்றெழுத்து...!
அன்னை காட்டிய அன்பு ..மூன்றெழுத்து...! அன்பினால் உருவாகும் ..கனிவு ,மூன்றெழுத்து...! கனிவினால் ,உருவான பணிவு..மூன்றெழுத்து...! பணிவு ஆல் உண்டான ..தகுதி ..மூன்றெழுத்து...! தகுதியால் வந்த திறமை மூன்றெழுத்து...!
திறமையினால் நான் அடைந்த பதவி..மூன்றெழுத்து...!
பதவியினால் நான் செய்யும் கடமை ..மூன்றெழுத்து...!
கடமையினால் எனை அடையும் வெற்றி...மூன்றெழுத்து...!
வெற்றியினால் கிட்டும் புகழ் ..மூன்றெழுத்து...!

இந்த மூன்றெழுத்தில் எல்லாம் நான் என்ற ஈரெழுத்து இருக்க காரணம் ஆன என் அன்னை நீயே என்றும் என் (உயிர்) முதலெழுத்து...!

6 comments:

Mangai said...

ரொம்ப நல்ல இருக்கு.

கனிவு ஈரெண்டு சுழி 'ன'

Mangai said...

நானும் தப்பு. இரெண்டு என்பது ஈரெண்டு ஆகி விட்டது

Unknown said...

தங்கள் வருகைக்கும்... கருத்துக்கும் ...,!
வாழ்த்துக்கும்...!

மிக்க நன்றி..

இந்த இடுகை நான் (quillpad)மூலம் எழுதியது...
தற்பொழுதுதான் கலப்பை கொண்டு உழுகின்றேன்...

வாழ்த்துங்கள்
வளர்கிறோம்..
அன்புடன்
இரா.செந்தில் நாதன்

Mangai said...

நன்றி.

நான் இன்னும் Quillpad தான். எனக்கு அதில் இருந்து இன்னும் விடுதலை இல்லை.

Unknown said...

தாமததிற்கு மன்னிக்கவும்.

எளிதான வழி உள்ளது...

உங்கள் கணிணியில் எ-கலப்பை நிறுவ வேண்டியதுதானே...

இது மிகவும் எளிது ,quillpad போல் தான்...

மேல் விவரங்களூக்கு...
http://all-opinion.blogspot.com
இல் என் பகிர்வு வலைப்பூக்களில் ( தமிழில்)PKP.in ,பார்க்கவும்..
விரும்பினால்
உதவிக்கு தனிமடலில் தொடர்பு கொள்க..

அன்புடன்
இரா.செந்தில் நாதன்

mohamedali jinnah said...

கடலும் ,மலையும் நெடுந்தூரமும் அன்புக்கும் நட்புக்கும் தடையில்லை .அன்புக்கு அளவுகோல் இல்லை .அன்பு அது உள்ளத்தினைச் சார்ந்தது . இருப்பினும் தொடர்ந்து தொடர்பு கொள்வது அன்பின் ஆழத்தினை அதிகப்படுத்தும் .பார்வை வழி காண மனமே ஒரு பார்வை. பார்வை வழி பாதையினை திறந்து உள்ளத்தினை பகுவப்படுத்தி அன்பினை உறுதிப்படுத்தும் இயல்புடையது. இணையதளங்களும் தொலைபேசிகளும் இதற்கு உதவி செய்ய
வாய்பளிக்கின்றது. நாமும் இதனை பயன்படுத்தி நம் அன்பினையும் நட்பையும் வளர்த்துக் கொள்வோம்.அன்பை விரும்பாதவர் யார்!